குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடிய ரன்பீர் கபூர்| Ranbir Kapoor celebrated his birthday with his family

  மாலை மலர்
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடிய ரன்பீர் கபூர்| Ranbir Kapoor celebrated his birthday with his family

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் ரன்பீர் கபூர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார். சர்வதேச அளவில் திரைக்கு வந்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது.அடுத்ததாக ராமாயணம் என்ற படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீதையாக சாய்பல்லவி நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் ரன்பீர் கபூர் தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொணடாடினார். மனைவி ஆலியாபட், மகள் ரஹாவுடன் மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரை உலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ஆலியாபாட் தற்பொழுது ஜிக்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை